இந்தியா சினிமா

சுஷாந்த் சிங் மரணம் கொலையல்ல தற்கொலை- சி.பி.ஐ. அறிக்கை

  • March 23, 2025
  • 0 Comments

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, சி.பி.ஐ. இந்த வழக்கை முடித்து வைத்தது. இது குறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் தனது பாந்த்ரா பிளாட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த இரண்டு வழக்குகளில் இறுதி அறிக்கையை […]

சினிமா

விவாகரத்தான காலத்தில் மன அழுத்தத்திற்குள்ளாகி; தினமும் 1 லிட்டர் மது அருந்தினேன் – அமீர் கான்

  • March 23, 2025
  • 0 Comments

பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் அமீர்கான், கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாசி, ராஜா இந்துஸ்தானி, இஷ்க் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து பாலிவுட்டின் முன்னணி ஸ்டார் நடிகராக மாறினார். இவர் நடித்த பிகே, லகான், தங்கல் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளின. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இந்த திரைப்படங்கள் கொண்டு சென்றது. இந்நிலையில், நடிகர் அமீர்கான் தனது 60வது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கெதிராக ஐநாவில் சிங்கப் பெண்ணாக ஓங்கியொலித்த அனந்தி சசிதரன்.

  • March 22, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற பிரிவு நான்கு நிகழ்ச்சி நிரலான ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா பொலிஸாரால் மீட்பு

  • March 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்ட போதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது யாழில் நீண்ட நாட்களுக்குப் […]

உள்ளூர்

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது

  • March 21, 2025
  • 0 Comments

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகள் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் செலவிடக் கூடிய தொகை தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதற்கமைய நாளை சனிக்கிழமை (22) அங்கீகரிக்கப்பட்ட சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 80 000க்கும் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக செலவுகளும் அதிகமாகவே காணப்படும். அதேவேளை வேட்பாளர்கள் செலவிடக் கூடிய […]

உள்ளூர்

வியாழேந்திரனும் பிள்ளையானும் மக்களை மக்களை புதைக்கப்போகின்றார்கள் விமலசேன லவக்குமார் தெரிவித்துள்ளார்

  • March 20, 2025
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான்இ கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டில் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம்

  • March 17, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை (19-03) முதல் சனிக்கிழமை (22-03) வரை – நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதன் முழு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அன்னலிங்கம் பிரேமசங்கர் பதவி உயர்வு பெற்றுள்ளார்

  • March 17, 2025
  • 0 Comments

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றதை அடுத்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார். கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (15-03) திருகோணமலையில் இடம் பெற்றது. குறித்த பதவி உயர்வினை ஜனாதிபதியால் கடந்த செவ்வாய்க்கிழமை (11-03) வழங்கப்பட்டிருந்தது. குறித்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், ஏ.டபிள்யூ அப்துல் சத்தார் உட்பட சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

1988 மற்றும் 1989 ஆகிய காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிப்போம் – சாமர சம்பத் எம்.பி

  • March 17, 2025
  • 0 Comments

விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம். பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பட்டலந்த அறிக்கை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

  • March 17, 2025
  • 0 Comments

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20-03-2025) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. தேர்தல் பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச உத்தியோகஸ்த்தர்கள் தவறாமல் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என […]