உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ஒருவர் வாழ 15,780 ரூபாவும் கொழும்பில் ஒருவர் வாழ 17,617 ரூபாவாவும் செலவாகுமாம்

  • March 16, 2025
  • 0 Comments

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஜனவரி மாத உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் படி, செலவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 2025 ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொகை 16,334 ரூபாவாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் 16,191 ரூபாவா பதிவு செய்யப்பட்டது. தனிநபர் செலவீனங்கள் அதிகம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பெண் வைத்தியர் மீதான பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு

  • March 14, 2025
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10-03-2025) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியரிடமிருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை கண்டுபிடிப்பதற்காக கல்நேவ பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து அநுராதபுரம், கல்நேவ பிரதேசத்தில் உள்ள பிரதான சந்தேக நபரின் வீட்டை இன்று சோதனையிட்டுள்ளனர். இதன்போது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கெதிராக இன்றும் போராட்டம்

  • March 13, 2025
  • 0 Comments

யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது குறித்த கட்டுமானமானது மக்களது காணியை அபகரித்து கட்டியுள்ள நிலையில் காணி உரிமையாளர்களாலும், பொதுமக்களாலும், அரசியல் பிரதிநிதிகளாலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றமை வழமை. அந்தவகையில் இன்றைய தினமும் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் வடை வாங்கினால் சட்டை ஊசி இலவசம். புதிய ஒப்பர்

  • March 4, 2025
  • 0 Comments

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையத்துக்கு அருகில் சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03-03-2025) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது. தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஓய்வு பெற்றுள்ள இராணுவ வீரர்கள் இருவர் பிணையில் விடுவிப்பு

  • March 2, 2025
  • 0 Comments

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்

  • March 2, 2025
  • 0 Comments

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02-03-2025) முதல் ஆரம்பமாகின்றது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01-03-2025) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் மொஹமட் முனீர் தெரிவித்தார். புனித ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தலுடன் ; தொடர்புடைய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் கைது

  • March 2, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியா வீதிப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் கீத் நொயார் வேனில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துடத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (01-03-2025) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் போராட்டம்

  • February 27, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். ‘தாண்டாதே தாண்டாதே எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே […]

இந்தியா சினிமா முக்கிய செய்திகள்

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி

  • February 27, 2025
  • 0 Comments

80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்று மருத்துவவமனை வட்டாரங்கள் கூறுவதாக தகவல் வெளியாகி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வடகிழக்கில் பணியாற்றுமு; மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர்

  • February 27, 2025
  • 0 Comments

இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24-02-2025) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் செவ்வாய்கிழமை (25) இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த […]