யாழ்.போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கெதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை தொழிற்சங்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை வியாழக்கிழமை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக வைத்தியசாலை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை […]