உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் படையினர் மற்றும் பொலிஸார்; வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்

  • February 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (20-02-2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ‘ யாழ் – […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளுக்கு பெற்றோர் தலைக்கவசம் அணியாது ஏற்றி சென்றால் நடவடிக்கை – ஆளுநர்

  • February 20, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் பணித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர் உள்ளிட்ட எவரும் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்காது ஏற்றிச் செல்வதாக முறையிடுகின்றனர். குறிப்பாக மருத்துவர்களால் இந்த விடயம் அதிகளவில் எனது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் விடயங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென்கிறார் ஜெகதீஸ்வரன் எம்பி

  • February 20, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல், பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய கனிய மணல் அகழ்வுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இது மக்களுக்கான அரசாங்கம். எனவே, மன்னார் மக்கள் கிலேசம் அடையத் தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் நேற்று (19-02-2025) கனிய மணல் ஆய்வினை மேற்கொள்ள கள விஜயம் செய்த குழுவினர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மன்னார் மாவட்டத்தில் கனிய மணல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் கடல் பரப்புக்குள் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • February 20, 2025
  • 0 Comments

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ தப்புவதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்

  • February 19, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நந்துன சிந்தக என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்த சம்பவம் தொடர்பில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இதேவேளைஇ பொலிஸ் கான்ஸ்டபிளுடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இந்தியாவிலிருந்து இன்றைய தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான […]

முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீதான தாக்குதலின் பின்னணியில் பொலிஸார் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்

  • February 19, 2025
  • 0 Comments

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றின் மூலம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

  • February 18, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழந்தார் .அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

தமிழ் அரசுக்கட்யிலிருந்து சிறிதரனை நீக்க முடியாதென அதன் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் திட்டவட்டம்

  • February 18, 2025
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே அமைத்து தேசியத்தையும் இருப்பையும் காத்துக்கொள்ள முடியும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாகவும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் […]

முக்கிய செய்திகள்

ரணில் அரசாங்கம்; ஆரம்பித்தவற்றைறே தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என்பது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016 மற்றும் 2017 காலப்பகுதியில் செய்வதற்றை 2023, 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பித்தவற்றை முன்னெடுத்து செல்வதை போன்றே இந்த வரவு செலவுத் திட்டத்தை பார்க்கின்றோம். […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் மணல் அகழ்வினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்

  • February 16, 2025
  • 0 Comments

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும்,எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கணிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று(15-02-2025 மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவில் மூன்று திட்டங்கள் […]