இந்தியா ஜோதிடம்

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் 50 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்

  • February 15, 2025
  • 0 Comments

நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள […]

முக்கிய செய்திகள்

கிளி பூநகரியில் மதுபானசாலைக்கெதிராக திரண்ட மக்கள்

  • February 14, 2025
  • 0 Comments

கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அதனையடுத்து, பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தங்களது […]

முக்கிய செய்திகள்

போட்டிப்பரீட்சையின்றி வேலைகோரி வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

  • February 14, 2025
  • 0 Comments

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதன்போதே மாவட்ட செயலகத்துக்கு முன்னால் பட்டதாரிகள் போராட்டத்தில் […]

கனடா முக்கிய செய்திகள்

‘கோண்வோல் தமிழ் சமூகம்’ பெருமையுடன் வழங்கும் தமிழ் மரபுத்திங்கள் விழா..!

  • February 14, 2025
  • 0 Comments

தமிழ் மரபுதிங்கள் விழா 2025 ‘கோண்வோல் தமிழ் சமூகம்’ வழங்கும் தமிழ் மரபுதிங்கள் விழா எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இடம். Nativity Hall (Quilles Nativite” Bowling) 301 Mc connel Ave,Cornwall,ON K6H 4L4. நிகழ்வு காலை 11.30 தொடக்கம் மாலை 7 மணி வரை ‘கோண்வோல் தமிழ் சமூகம்’ அனைத்து தமிழ் சொந்தங்களையும் அழைத்து நிற்கின்றது. https://www.youtube.com/@pathivunews/videos https://graphicsland.lk/

முக்கிய செய்திகள்

தையிட்டி மக்கள்; மத்தியில் காணி அளவீட்டின் நோக்கம் தொடர்பான புரிதல் இன்மையே இன்று போராடவேண்டிய நிலையேற்பட்டதாக ஈபிடிபி தெரிவிப்பு

  • February 13, 2025
  • 0 Comments

தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம் தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மைiயால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை கடந்த அரசாங்க காலத்தில் விடுவிக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களூக்கும் கட்சின் பூரண ஓத்துழைப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் […]

முக்கிய செய்திகள்

சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – உதய கம்மன்பில

  • February 11, 2025
  • 0 Comments

சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் மாத்திரமே சவாலுக்குட்படுத்த முடியும். சட்டமா அதிபரை அச்சுறுத்தி சட்டத்தின் ஆட்சியை மலினப்படுத்த வேண்டாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று (10-02-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த […]

முக்கிய செய்திகள்

13 வது திருத்த அரசியலமைப்பான மாகாணசபைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமென கலாநிதி ஜெஹான் பெரேரா கோரிக்கை

  • February 9, 2025
  • 0 Comments

அரசியலமைப்பு விடயத்தையும், பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வு விடயத்தினை சமநேரத்தில் முன்னெடுப்பதற்கான இயலுமை தற்போதைய அரசாங்கத்திடத்தில் காணப்படவில்லை. அரசாங்கம் அரசியலமைப்பு விடயத்தினை பொருளாதார விடயங்களை கையாண்டதன் பின்னர் கையாள்வதற்கு முனைகின்றது என்று கருதுகின்றேன். எனினும் அரசியலமைப்பு சம்பந்தமான விடயம் முக்கியமானது, வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும். ஆகவே பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கம் சமகாலத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி அவற்றை வினைத்திறனாக செயற்படுத்துவதன் ஊடாக வடக்கு,கிழக்கு மக்களின் […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்.

  • February 7, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள், ‘ அரச நியமனத்தினை உறுதிப்படுத்து’, ‘காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே’, ‘அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே’, ‘வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்’ போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் மோட்டார் வண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது

  • February 7, 2025
  • 0 Comments

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை (6) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகாவித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் வீதியால் சென்றோர் முயன்ற போதும் மோட்டர் சைக்கிள் பகுதியளவில் எரிந்து நாசமாகிய […]

உலகம்

நைஜீரிய பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

  • February 6, 2025
  • 0 Comments

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்தது. இது அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது. இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. இதனால் தீயில் கருகி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து தீயணைப்புப் […]