முக்கிய செய்திகள்

நெல் களஞ்சியசாலைகளை இராணுவத்தினர் சுத்தப்படுத்துகின்றனர்

  • January 19, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் […]

முக்கிய செய்திகள்

யாழ் வந்த சந்தோஸ்ஜா யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்

  • January 18, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவில்லை. […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லையெனில் அவர்களை காணாமலாக்கியது யாரென? – அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

  • January 17, 2025
  • 0 Comments

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின், அவர்களை காணாமலாக்கியது யார் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (17) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டது : முன்னாள் எம்பி சுமந்திரன்

  • January 16, 2025
  • 0 Comments

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-CPJ

  • January 10, 2025
  • 0 Comments

இலங்கையை சேர்ந்த சுயாதீன தமிழ் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாகரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணையை நடாத்த வேண்டும். அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின்(CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna வியாழக்கிழமை அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். […]

முக்கிய செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

  • January 8, 2025
  • 0 Comments

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுசன் சந்திரஜித் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணிவரை கொழும்பின் பல வீதிகளில் பாதசாரிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

உரும்பிராயில் கூலித்தொழிலாளியை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்!

  • January 7, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்து பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்றையதினம்(07-01-2025) உத்தரவிட்டது. கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார். {{CODE3}} சில தினங்களுக்கு பின்னர் அடிக்கடி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் […]

உள்ளூர்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு!

  • January 7, 2025
  • 0 Comments

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட […]

உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய எதிர்வு கூறல்!

  • January 7, 2025
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகள் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)30.12.2024

  • December 31, 2024
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடகில் போராட்டம் தமிழகத்தற்கும் யாழ்ப்பாணத்திற்குமான கப்பல் சேவை 2ம் திகதி ஆரம்பம் புதிய இராணுவ கடற்படை தளபதிகள் நாளை பதவியேற்கவுள்ளனர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மன்னாரில் கையெழுத்து போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட கிராம அலுவலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை- இரா.சாணக்கியன் https://youtu.be/JX8YzBkqb1I