உள்ளூர்

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு.

  • December 26, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட  முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் […]

உள்ளூர்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

  • December 25, 2024
  • 0 Comments

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார். Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை […]

உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • December 17, 2024
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர்

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

  • December 15, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் […]

உள்ளூர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமனம்.

  • December 2, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார். இதையும் படியுங்கள்> முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அத்துடன், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கயந்த கருணாதிலக்க 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் […]

உள்ளூர்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

  • December 2, 2024
  • 0 Comments

  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரதீப் அபேரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் […]

உள்ளூர்

மீண்டும் வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.

  • December 2, 2024
  • 0 Comments

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக […]

உள்ளூர்

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

  • December 2, 2024
  • 0 Comments

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை ஃபெங்கல் புயல், நேற்று காலை 11.30 மணியளவில் வட தமிழகம் – புதுச்சேரி கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததது. ஃபெங்கல் புயல் காரணமாக இந்தியாவின் […]

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டம்.

  • October 28, 2024
  • 0 Comments

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் […]

உலகம்

அமெரிக்காவில் வானொலி கோபுரத்துடன் ஹெலிகொப்டர் மோதி விபத்து 4 பேர் பலி.

  • October 22, 2024
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். விபத்து நடைப்பெற்ற பகுதியில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் […]