நள்ளமா? நல்லமா? சாமர சம்பத் தொடர்ந்தும் உள்ளளே தான்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க திங்கட்கிழமை (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.