அம்பாறையில் மதுபானசாலைக்கு எதிராக போராடிய மக்களிடம் சென்ற சுமந்திரனுக்கு நல்லசாத்துப்படி
அம்பாறை – பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், […]