சுகாதார அமைச்சு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவருக்கு விளக்கமறியல் 25 பேர் பிணையில் விடுதலை
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவர் சங்கம் […]