உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்ற கொலை சந்தேக நபரான செவ்வந்தி பற்றி தகவல் தருவோருக்கு 12 இலட்சம் சன்மானம்

  • March 5, 2025
  • 0 Comments

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஆனையிறவு உப்பளத்தை இளங்குமரன் எம்பி பார்வையிட்டுள்ளார்

  • March 4, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகிய இடங்களுக்கு நேற்று (03-03-2025) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தக்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் ஆனையிறவு உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கைத்தொழில் அமைச்சர் எதிர்வரும் 7ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தர இருக்கின்றார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கில் 200 கிலோ கஞ்சா கைப்பற்றல்

  • March 4, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டன. இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக யாரும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சித்தார்த்தனும் சி.வி.கே. சிவஞானமும் கடிதப்பரிமாறல்கள்

  • March 3, 2025
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டு அறியத் தருவீர்களானால் அது பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் பேசி சாதகமான பதிலை தங்களுக்கு அறியத் தரமுடியும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் சித்தார்த்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

திட்டமிட்ட வகையில் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்- பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த

  • March 1, 2025
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயற்கையான எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜெயந்த இங்கு சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

  • February 28, 2025
  • 0 Comments

2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (27-02-2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமலை குழிக்கு அனுப்பவுள்ளதாக அரச எம்.பி கூறியுள்ளதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் – சாகர காரியவசம்

  • February 25, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவை விரைவில் குழிக்கு அனுப்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதை காண்பிக்கிறது. ஆளுந்தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றமை கவலைக்குரியது. நாமல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

துப்பாக்கிச் சூடுகளும் கைதுகளும் தொடர்கின்றன.

  • February 25, 2025
  • 0 Comments

ஜா – எல, உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20-02-2025) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்கள் சிலர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை மண்டியிட வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இது தொடர்பில் நீர்கொழும்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தினால் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும்… மீண்டும்… தோல்வியுற்ற தலைவர்கள் இணைந்து 9 கட்சி கூட்டு அமைத்து உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டி

  • February 24, 2025
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய ஐந்து கட்சிகளும், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவ கட்சி, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசு மீதான மக்கள் அங்கீகாரம் உயர்ந்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது

  • February 23, 2025
  • 0 Comments

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. இதன் ஊடாக தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொது மக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் 55 வீதம் இலங்கை பொருளாதாரமானது ‘மேம்பட்டுள்ளதாக’ சிந்திக்கின்றனர். எனினும் மக்கள் தொகையில் […]