அரசு மீதான மக்கள் அங்கீகாரம் உயர்ந்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது
கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. இதன் ஊடாக தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொது மக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் 55 வீதம் இலங்கை பொருளாதாரமானது ‘மேம்பட்டுள்ளதாக’ சிந்திக்கின்றனர். எனினும் மக்கள் தொகையில் […]