முக்கிய செய்திகள்

ஜேவிபி கட்சிக்க வருடம் 60 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டு வருகின்றதென தயாசிறி தெரிவித்துள்ளார்

  • February 14, 2025
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க முன்னர் வரவு – செலவு திட்டம் விவாதம், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் மற்றும் தமிழ் – சிங்கள புத்தாண்டு உள்ளிட்ட காரணிகளை கவனத்தில் கொண்டு தீர்மானமொன்றை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் கூட்டணி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் […]

முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி ஏழ்மையான கட்சி என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

  • February 14, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஐ.தே.க. மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும். எந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் சஜித் பிரேமதாசவே அதன் தலைவராவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நேற்று (13-02-2025) தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் […]

முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு ரஸ்யா அடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்த இலங்கைக்கு ரஸ்யா பாராட்டு தெரிவித்துள்ளது

  • February 13, 2025
  • 0 Comments

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்றுவருடங்களாகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கை பின்பற்றிய அணிசேரா கொள்கையை ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன்வரவேற்றுள்ளதுடன் புதிய அரசாங்கமும் இதேகொள்கையை பின்பற்றும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகளிடையிலான பேச்சுவார்த்தை இந்த மோதல் முடிவிற்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் லசந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விடுதலைக்கான பரிந்துரையை சட்டமா அதிபர் ரத்து செய்துள்ளார்

  • February 13, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் இன்று அறிவித்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் அவரது குறிப்பேடு காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி பரிந்துரை […]

முக்கிய செய்திகள்

காதலர் தினமான எதிர்வரும் 14 ம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.

  • February 11, 2025
  • 0 Comments

பிரதமர் ஹரினி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16க்கு அமைய எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் நேற்று (10-02-2025 ) பிரசுரிக்கப்பட்ட 2423ஃ04ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அன்றைய தினம் பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார். அன்றைய தினம், உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் (விசேட […]

முக்கிய செய்திகள்

நாளை மின்வெட்டு நடைபெறாதென இலங்கை மின்சார சபை அறிவிப்பு

  • February 11, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி பௌர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08-02-2025) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சாரசபை தீர்மானித்திருந்தது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (10-02-2025) […]

முக்கிய செய்திகள்

சட்டமா அதிபரின் எதேச்சதிகாரப்போக்கிற்தெதிராக கவனயீர்ப்புப்போராட்டம்

  • February 7, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுவிப்பதற்குப் பரிந்துரை செய்திருக்கும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக வியாழக்கிழமை (6) நடைபெற்ற கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தினால் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உடலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து […]

முக்கிய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவிக்கு ஐநாவில் முக்கிய பதவி

  • February 6, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் இலங்கைக்கான நிரந்திர வதிவிட அலுவலகத்தின் முதன்மை செயலாளராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்து. இதற்கான உத்தியோகபூர்வ நியமனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மறைவுக்கு பின்னர் அமெரிக்காவில் வசித்து வரும் சொனாலி சமரசிங்கவுடன் குறித்த பதவி தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள அவர் நியூயோர்க்கில் அமைந்துள்ள இலங்கையின் […]

முக்கிய செய்திகள்

ஆட்சியாளர்கள் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியமாகவும் பெற்றுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்

  • February 4, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். தனது”X” தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் ருளுயுஐனு இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், மனிதாபிமான […]

முக்கிய செய்திகள்

இலங்கையின் சுதந்திரமென்பது அரசியல் ரீதியாகப் பெற்றுக் கொண்ட சுதந்திரம் மாத்திரமேயாகும்- பேராயர் .

  • February 4, 2025
  • 0 Comments

ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல் மூலம் சுதந்திரத்தை மேலும் நிலைநாட்டி எமது நாட்டில் வாழ்கின்ற பல்வேறு இனத்தவர்களிடையேயும் மதத்தவர்களிடையேயும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் விருத்தி செய்து உண்மையான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய பாதையில் அடியெடுத்து வைத்துள்ளோம். அரசியல் தலைவர்கள் பொதுநலத்துடன் நாட்டைக் கொண்டுசெல்வதற்காக செயற்பட வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இலங்கையின் 77ஆவது சுதந்திரதினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவிப்பதையிட்டு […]