அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு
ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் விடுதி மற்றும் அதன் அருகில் இருந்வர்கள் 29 பேரும் உயிரிழந்தனர். ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை டவுன்லோடு செய்ய வெளிநாட்டிற்கு […]