தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது
குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து […]