உள்ளூர் முக்கிய செய்திகள்

ராஜபக்ச அரசாங்கத்தின் போர் குற்றங்களை ஒரு போதும் மறத்தலாதென கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் தெரிவிப்பு

  • May 19, 2025
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்றது படுகொலைகள் மாத்திரமல்ல இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர் ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது.அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வரலாற்றை திரும்பிப்பார்க்கும் அனைவரும் பெருமிதமான தருணங்களையும் வலிமிகுந்த தருணங்களையும் நினைவுகூருவார்கள். தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான தமிழ் […]

உள்ளூர்

மட்டக்களப்பில் குடிமனையில் 6 அடி முதலை புகுந்ததால் பரபரப்பு

  • May 7, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டம், சின்ன ஊறணி பிரதேசத்தில் அமைந்துள்ள குடிமனை பகுதியில் இன்று அதிகாலை 6 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. விழிப்புடன் இருந்த பிரதேச மக்கள் குறித்த முதலை மீது கட்டுப்பாடுடன் நடவடிக்கை எடுத்து அதை பாதுகாப்பாக மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்கள் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்தை தொடர்புகொண்டு முதலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அண்மைக்காலமாக மட்டக்களப்பில் குடிமனைப் பகுதிகளுக்குள் முதலைகள் புகுந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகம் கனடா

கனடா விற்பனை செய்யப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதியிடம் கனடா பிரதமர் நேரடியாக தெரிவித்துள்ளார்

  • May 7, 2025
  • 0 Comments

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் கனடா பிரதமரான மார்க் கார்னி சந்தித்தார் அப்போதும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இனைப்பது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தார் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதால் கனடாவுக்கு வரி விலக்கு, பாதுகாப்பு என பல நன்மைகள் கிடைக்கும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கனடா பிரதமரான மார்க் கார்னி, அவர் பேசி முடித்ததும், சில இடங்கள் விற்பனைக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

40 பாடசாலைகளில் சேகரித்த தகவலின்படி, 9.1 வீதமான மாணவர்கள் உயிரை மாய்த்துச் கொண்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

  • May 5, 2025
  • 0 Comments

உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர், கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட பாடசாலையும் இந்த சம்பவத்தில் நீதியான முறையில் செயல்பட்டிருந்தால், இவ்வாறான சம்பவம் நிகழாது எனக் கூறினார். ஜோசப் ஸ்டாலின், ‘அம்ஷிகாவின் மரணத்தில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்’ என்று அறிவித்துள்ளார். மேலும், ‘அந்த மாணவியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இத்தகைய சம்பவம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்

  • May 2, 2025
  • 0 Comments

ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2020 – 2024 ஆண்டுக்கான ஓய்வூதியம் பெற்றோரின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ‘2020 – 2024 ஓய்வூதிய ஒன்றியம்’ குழுவினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் […]

உள்ளூர்

பாம்புடன் சமைத்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்

  • May 2, 2025
  • 0 Comments

பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சமையல்காரர் உயிரிழந்த பாம்பை ஒதுக்கிவிட்டு மதிய உணவை பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மொகாமா நகரில் சுமார் 500 குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டதாக […]

இந்தியா

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி அனுமதி!

  • April 30, 2025
  • 0 Comments

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ,ந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எப்போது, எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை ,ந்தியப் பிரதமர் வழங்கியுள்ளதாக, இந்திய அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று புது டெல்லியில் நடைபெற்ற விசேட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா கணவன் மனைவி கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

  • April 28, 2025
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 […]

உள்ளூர்

தமிழ் தேசிய பேரவைக்கு மக்கள் வாக்களிக்கவேண்டுமென மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் வேண்டுகோள்

  • April 28, 2025
  • 0 Comments

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவைக்கு வாக்களிக்குமாறு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் அழிக்கப்பட்ட தீர்ப்புக்கு மதிப்பளித்து தனது போக்கை மாற்றி தானாக முன்வந்து தமிழ்தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை அமைப்பதற்கு செயலாற்றிய கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது. தமிழ்தேசிய பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகளும் அதன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

2025ம் ஆண்டு நேற்றுவரை (22-04) 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது

  • April 23, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவற்றில் 23 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 14 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.