இந்தியா முக்கிய செய்திகள்

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

  • April 22, 2025
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் அரசாணை வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த […]

உள்ளூர்

கத்தோலிக்கர்களின் ஆன்மீக தலைவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

  • April 22, 2025
  • 0 Comments

நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசருக்கு சிவப்பு நிற குருத்துவ உடை மற்றும் தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் செபமாலையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் பரிசுத்த பாப்பரசர் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்த வத்திக்கானில் உள்ள அவரது இல்லமான காஸா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளன. பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் 23 ஆம் திகதி புதன்கிழமை வத்திக்கான் நேரப்படி காலை 9 மணிக்கு சென் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, 26 ஆம் திகதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்!

  • April 20, 2025
  • 0 Comments

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சி ன்டெக்லஸ் (Culex (Lephoceraomyia) cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க கூறியுள்ளார். இதையும் படியுங்கள்>உள்ளூராட்சி சபை தேர்தலில் சைக்கிளுக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி […]

இந்தியா முக்கிய செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்!

  • April 20, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு […]

உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தாரிகள் யாரென அனுர அறிவிப்பாரா? முஜிபுர் ரஹ்மான் எம்.பி

  • April 20, 2025
  • 0 Comments

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை குறித்த தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் […]

இந்தியா முக்கிய செய்திகள்

வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது!

  • April 15, 2025
  • 0 Comments

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப். 14) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ‘ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதோடு நம்முடைய அரசினுடைய கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதை சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும், […]

இந்தியா முக்கிய செய்திகள்

தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

  • April 15, 2025
  • 0 Comments

அவருடைய வாழ்த்துச் செய்தியில், ‘மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசிர்வதிக்கப்படட்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். இதையும் […]

உள்ளூர்

ஜனாதிபதி இன்று அவசரமாக சர்வகட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

  • April 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக இன்று அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு நேற்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாடுகள் கடத்தும் மஸ்தான் எம்.பி. வவுனியாவில் சம்பவம்

  • April 9, 2025
  • 0 Comments

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08-04) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஒரு லொறியை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது. லொறியில் இருந்த மூவரையும் கைது செய்த பொலிஸார், 20 மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு […]