உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • April 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மகன் தாயை அடித்தே கொன்றுள்ளான்

  • April 7, 2025
  • 0 Comments

வீட்டு வளாகத்தில் நேற்று (06-04) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில்; உருகுலைந்த நிலையில் ஆணா பெண்ணா என்று அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு!

  • April 1, 2025
  • 0 Comments

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று  காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் இருந்து ஆண்கள் அணியும் மேல் ஆடை ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

முக்கிய செய்திகள்

13 நீதிமன்றங்களில் 47 வழக்குகள் 20 பிடிவிறாந்துகள் 53 வயதுப் பெண் கைது

  • March 31, 2025
  • 0 Comments

நாட்டில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 53 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும் காலி ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரை கைது செய்வதற்கான 20 பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக […]

உலகம் வணிகம்

உலகின் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை எலான் மஸ்க் அவரே அவருக்கு விற்றுள்ளார்

  • March 29, 2025
  • 0 Comments

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்துள்ளார். அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான ஓ யுஐ நிறுவனத்துக்கு […]

உள்ளூர்

யாழப்பாணத்தில் 5ம் ஆண்டு மாணவியை தடியால் சின்னதாய் ஒரு தட்டு தட்டிய ஆசிரியர் கைது

  • March 28, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அதனை […]

உலகம் வணிகம்

சாம்சங் நிறுவனத்தின் சீ.இ.ஓ. மாரடைப்பால் மரணம்

  • March 25, 2025
  • 0 Comments

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 63 வயதான ஹான் ஹாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்ததாக சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இணை தலைமை செயல் அதிகாரி உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவியை ஏற்க இருப்பது யார் என்பது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. […]

உள்ளூர்

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு 114 பெரும்பான்மை வாக்குகளால்  நிறைவேறியது

  • March 21, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர்

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

  • March 21, 2025
  • 0 Comments

பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கான பொதிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை வந்தடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 பொதிகள் வந்துள்ளன. அவை உரிமை கோரப்படாததால், பொதிகளை பரிசோதிக்க 19 ஆம் திகதி தபால் மா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டது. பரிசோதனையின் போது 14 பொதிகளில் 272 கிராம் கஞ்சா போதைப் பொருளும், 2,049 […]

உலகம் முக்கிய செய்திகள்

உக்ரைன் மீதான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த புதின் ஒப்புதல்

  • March 19, 2025
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. […]