இந்தியா

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் மணிப்பூர் பயணமாகவுள்ளனர்

  • March 19, 2025
  • 0 Comments

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த […]

உலகம்

அமெரிக்க மற்றும் ரஸ்சிய ஜனாதிபதிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

  • March 17, 2025
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. முன்னதாக சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாட்கள் போர் […]

உலகம் முக்கிய செய்திகள்

எலான் மஸ்க் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

  • March 6, 2025
  • 0 Comments

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றீடு செய்வது தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டத்தை இணை அனுசரணை நாடுகள் வரவேற்றுள்ளன

  • March 4, 2025
  • 0 Comments

நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் – இணை அனுசரணை நாடுகள் வேண்டுகோள் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முழுமையான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக கடந்தகால பரிந்துரைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் என இணை அனுசரணை நாடுகள்வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரிட்டன் வடஅயர்லாந்து கனடா மலாவி மொன்டிநீக்ரோ வடக்குமசடோனியா ஆகிய நாடுகள் தமது அறிக்கையில் மேலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில்

  • March 2, 2025
  • 0 Comments

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில் டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01-03-2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ‘உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற […]

உலகம் முக்கிய செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதிக்கு கெட்அவுட் (Get Out)சொன்னார் அமெரிக்க ஜனாதிபதி

  • March 1, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவேளை இருவரும் உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாட்டையும் இரத்து செய்தது. ரஸ்யாவுடனான உடன்பாட்டிற்காக உக்ரைன் விட்டுக்கொடுப்புகளிற்கு தயாராகயிருக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்த பின்னரே இருவரும் கடுமையாக உரையாட தொடங்கினார்கள். விட்டுக்கொடுப்பின்றி எந்த உடன்பாட்டிற்கும் வரமுடியாது நிச்சயமாக நாங்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அதானி நிறுவனத்தின் நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக தருமாறு அரசாங்கம் கோரிக்கை

  • March 1, 2025
  • 0 Comments

மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மலையகத்திற்கான தொரூந்து சேவை பாதிப்பு

  • March 1, 2025
  • 0 Comments

பதுளை ரயில் நிலையத்திற்கும் ஹாலி எல தொரூந்து நிலையத்திற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையகத்திற்கான தொரூந்து சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பிலிருந்து பதுளைக்கான தொரூந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு கோட்டை தொரூந்து நிலையத்திற்கும் ஒருகொடவத்தைக்கும் இடையில் உள்ள புளுமென்டால் தொரூந்து கடவையில் திருத்த வேலை இடம்பெறுவதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த பகுதி மூடப்பட்டிருக்கும் என தொரூந்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாரென : ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • March 1, 2025
  • 0 Comments

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் […]