உலகம்

சீனாவின் சரக்கு கப்பல் ரஸ்சியாவில் கரை ஒதுங்கியுள்ளது

  • February 12, 2025
  • 0 Comments

ரஸ்சியாவின் சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை அருகே சீன சரக்கு கப்பல் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறும் அபாயம் இருப்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஸ்சியாவின் பால்டிக் கடற்பகுதியில் அன் யாங்-2 என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. சீனாவுக்குச் சொந்தமான அந்த கப்பலில் சுமார் 1 லட்சம் டொன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன. சகலின் நெவெல்ஸ்கி நகரில் உள்ள உஸ்ட்-லுகா துறைமுகம் அருகே சென்றபோது அந்த […]

இந்தியா முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் படுதோல்வி

  • February 9, 2025
  • 0 Comments

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. அதன்படி டெல்லியில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இறுதிகட்ட முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் (யுயுP) […]

இந்தியா முக்கிய செய்திகள்

 டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

  • February 8, 2025
  • 0 Comments

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கடந்த 02ம் திகதி நடைபெற்றது. தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய […]

முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்பி நிதி மோசடி செய்தாரா?

  • February 8, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் […]

இந்தியா

தமிழ்நாடு திருச்சி பாலியல் வழக்கில் முதலாவது சந்தேன நபருக்கு குற்றவாளிக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

  • February 8, 2025
  • 0 Comments

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார்

  • February 7, 2025
  • 0 Comments

வவுனியா புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு […]

உலகம்

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக லெபனான் குற்றச்சாட்டு

  • February 7, 2025
  • 0 Comments

ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் எல்லைக்கு உட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் […]

இந்தியா முக்கிய செய்திகள்

13 வயது பாடசாலை சிறுமியை அப் பாடசாலை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளனர்

  • February 6, 2025
  • 0 Comments

கிருஸ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு சிறுமி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: கிருஸ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் 13 வயது அரசுப் பள்ளிச் சிறுமி, பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வி அடைந்திருக்கிறோம் என்பதையே […]