சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டு நேரப்படி நேற்று (04) பிற்பகல் 1 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
![]()
அதேநேரம், ஆபத்து இன்னும் குறையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படியுங்கள்>இலங்கையின் சுதந்திர தினத்தன்று போராட்டத்தில் குதித்த பிரித்தானிய வாழ் தமிழர்கள்!

